×

உரிமம் ரத்தாகும்; அடிமையானவர்களுக்கு மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைக்க முடியாது: கேரள முதல்வருக்கு மாநில மருத்துவர் சங்கம் கடிதம்

திருவனந்தபுரம்: மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைக்க முடியாது என்று கேரள மருத்துவர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதல் முதலில் கொரோனா வைரஸ் கேரளாவில் கால் பதித்தது. மாநிலத்தில் தற்போது வரை  வைரஸ் தாக்குதலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். 200-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, ஏப்ரல் 14-ம் தேதி வரை  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியவாசிய பொருட்களான பால், காற்கறி உள்ளிட்டவை மட்டும் விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன், ஊரடங்கு உத்தரவு அமல் காரணமாக மது விற்பனை தடைப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. எனவே,   கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க கலால் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இலவச சிகிச்சையை வழங்கவும், திரும்பப் பெறும் அறிகுறிகளைக் கொண்டவர்களை டி-அடிமையாதல்  மையங்களுக்கு அனுமதிக்கவும் கேரள அரசு கலால் துறையிடம் கேட்டு கொண்டுள்ளேன். திடீரென மதுபானம் கிடைக்காதது சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஆன்லைனில் மது விற்பனை செய்வதற்கான விருப்பத்தையும்  அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைக்க முடியாது என்று கேரள மருத்துவர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்து மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளது. மதுபானம் திரும்பப் பெறும் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு  cientific சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும். மதுபான அடிமையானவர்களை அவர்கள் வீட்டில் அல்லது மருத்துவமனையில் வைத்து மருந்துகளுடன் சிகிச்சையளிக்கப்படலாம். மதுபானம் வழங்குவது அறிவியல் பூர்வமாக  ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மதுபானத்திற்கு ஒரு மருந்து வழங்க மருத்துவர்களுக்கு எந்த சட்டபூர்வமான கடமையும் இல்லை. மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைத்தால் மருத்துவம் பார்பதற்கான உரிமம் ரத்தாகிவிடும் என்றும் தமது  நிலையை விளக்கி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இந்திய மருத்துவர் சங்கத்தின் மாநில கிளை எழுதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.


Tags : CM ,addicts ,doctor ,Kerala State Doctors Association ,Kerala , The license is canceled; Can't recommend alcohol to addicts: Kerala doctor's letter to CM
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!