அரசின் அடுத்த 3 மாத செலவினங்களுக்காக ரூ.2,042 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை இன்று முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அரசின் செலவினங்களுக்காக அடுத்த 4 மாதத்திற்கான நிதிக்கு ஒப்புதல் பெற காலை 9.30 மணிக்கு புதுச்சேரி பேரவை கூடியது. புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் சிலநிமிடங்கள் மட்டுமே நடைபெறம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவைக்குள் முக கவசம், மற்றும் கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. புதுச்சேரி சட்டசபையில் ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கான 2 ஆயிரத்து 42 கோடியே 61 லட்சத்து 86 ஆயிரத்துக்கான  இடைக்கால பட்ஜெட்டை

முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். மேலும்

கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு அவையில் எம்.எல்.ஏக்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்

.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்கு சபாநாயகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்தி வைப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாததை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்தது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக நாராயணசாமி பேரவையில் தெரிவித்தார். இடைக்காலமாக நிதியாக ரூ.200 கோடியும், முழு நிவாரணமாக ரூ.995 கோடியும் வழங்க பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக பேரவையில் நாராயணசாமி அறிவித்தார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார். அனைவருக்கும் ரூ. 2 ஆயிரம் நிவாரண நிதி அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்  என கூறினார்.

Related Stories: