சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்: அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க கேரள முதல்வர் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் மதுவிற்பனைக்கு மாநில முதல்வர் பினராயி விஜயன் அனுமதியளித்துள்ளார்.  சீனாவில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உருவாகிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கு மேலாக பரவி  மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர். 1129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவை பொருத்தவரை இந்தியாவில் முதல்முதலில் அங்குதான் கொரோனா  வைரஸ் கால் பதித்தது. தற்போது வரை வைரஸ் தாக்குதலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். 200-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, கடந்த 24-ம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டுக்கு மக்களிடம் உரையாற்றிய  பிரதமர் மோடி, கொரோனா என்ற கொடூர வைரசை தடுக்க வேண்டுமென்றால் சமூகத்திலிருந்து விலகி இருப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும்.  அதற்காக மார்ச் 24-ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்றார். அதன்படி, ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியவாசிய பொருட்களான பால்,  காற்கறி உள்ளிட்டவை மட்டும் விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன், ஊரடங்கு உத்தரவு அமல் காரணமாக மது விற்பனை தடைப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. எனவே,  கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க கலால் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இலவச சிகிச்சையை வழங்கவும், திரும்பப் பெறும் அறிகுறிகளைக் கொண்டவர்களை டி-அடிமையாதல் மையங்களுக்கு அனுமதிக்கவும் கேரள அரசு கலால் துறையிடம் கேட்டு கொண்டுள்ளேன். திடீரென மதுபானம் கிடைக்காதது சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஆன்லைனில் மது விற்பனை செய்வதற்கான விருப்பத்தையும் அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.

Related Stories:

>