கொரோனா சிகிச்சைக்காக சொந்த கட்டிடத்தை வழங்கிய திமுக எம்எல்ஏ

ஆலந்தூர்: கொரோனா தடுப்பு பணியில் திமுகவினர் ஈடுபட வேண்டும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மாநகராட்சி 14 மற்றும் 15வது மண்டலத்தில்  கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும்   தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு 1,100 முக்கவசங்கள், 1,300 கையுறை, 25 லிட்டர் கிரிமிநாசினி ஆகியவற்றை சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த்ரமேஷ் வழங்கினார்.

Advertising
Advertising

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு சாதனங்கள் வழங்கியுள்ளதுடன், சோழிங்கநல்லூரில் உள்ள எனக்கு சொந்தமான அரவிந்த் ரெசிடென்சி என்ற குளிர்சாதன வசதியுடன்  கூடிய 29 அறைகள் கொண்ட  கட்டிடத்தை  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைத்து  சிகிச்சை அளிக்க மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்துள்ளேன்,’’ என்றார்.

Related Stories: