திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் உணவு, மருந்து இனி ‘ரோபோ’ தரப்போகுது...: கலெக்டர் தலைமையில் ஒத்திகை

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு வார்டில் உணவு, மருந்து, இதர பொருட்கள் வழங்க ரோபோ பயன்படுத்துவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் நேற்று நடந்தது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு வார்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோய் தடுப்பிற்கென பிரத்யேக ஆடைகளையும் பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா அறிகுறி தென்பட்டால் அந்த வார்டில் பணியில் உள்ள செவிலியர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இதனை தடுக்கும் வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உணவு மற்றும் மருந்து, இதர பொருட்கள் வழங்குவதற்காக ரோபோ பயன்படுத்துவதற்காக ரோபோ ஜாபியின், ஜாபிமெடிக் 20 கிலோ வரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும். இந்த ரோபோவை 50 மீட்டர் வரை பயன்படுத்தலாம். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி திருச்சி அரசு மருத்துவமனை கல்லூரியில் நடத்தி காட்டப்பட்டது.

Related Stories: