அரூரில் அதிக விலைக்கு அரிசி விற்ற ரைஸ் மில்லுக்கு சீல் வைப்பு

அரூர்: கொரோனா வைரசை தடுக்கும் விதமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, சிலர் உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, சப் கலெக்டர் பிரதாப், அரூர் மேல்பாட்ஷா பேட்டையில் செயல்படும் முருகன் என்பவரது, ரைஸ் மில்லில் ஆய்வு நடத்தினார். அப்போது அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ரைஸ் மில்லை பூட்டி நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Related Stories: