கொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ஆக உயர்ந்தது: 6.67 லட்சம் பேருக்கு பாதிப்பு

பாரீஸ்: உலகளவில் கொரோனா பலி 31 ஆயிரத்து 412 ஆக அதிகரித்துள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்பு, ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்டுள்ளது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் தாக்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 183 நாடுகளில் 6 லட்சத்து 67 ஆயிரத்து 90 பேரை பாதித்துள்ளது. இவர்களில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 700 பேர் குணமடைந்து உள்ளனர். இத்தாலியில் 10 ஆயிரத்து 23 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 92,472 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 12,384 பேர் சிகிச்சையில் குணமாகி உள்ளனர்.  ஸ்பெயினில் 6,528 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 78 ஆயிரத்து 747 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் 3,295 பேர் பலியாகி உள்ளனர். 81 ஆயிரத்து 394 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் 2,640 பேர் பலியாகி உள்ளனர். இங்கு 38 ஆயிரத்து 309 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2,191 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டங்கள் வாரியாக ஐரோப்பாவில் 22,259 பேரும், ஆசியாவில் 3,761 பேரும், மத்திய கிழக்கில் 2,718 பேரும், அமெரிக்கா மற்றும் கனடாவில், 2,250 பேரும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் 274 பேரும், ஆப்பிரிக்காவில் 34 பேரும், ஓசியானேவில் 16 பேரும் பலியாகி உள்ளனர்.

Related Stories: