சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை: சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல ஒரு நாளில் 5 ஆயிரம் பேர் அவசர உதவி எண் மூலம் தனிக்கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

கொரோனா நெருக்கடி காரணமாக மிகவும் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
Advertising
Advertising

இதில் பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காக சென்னைக்குள்ளேயே அல்லது மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்ய விரும்பினால் அவர்கள் அவசர கால கட்டுப்பாட்டு அறை எண் 75300 01100ஐ தொடர்பு கொண்டோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் மற்றும் gcpcorona2020@gmail.com என்ற முவரியில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்ட ஒரு நாளிலேயே சென்னை முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலம் செல்ல விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். அதைதொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகள் மக்களின் தேவைக்கு ஏற்பட சென்னையில் இருந்து வெளியே செல்ல அனுமதி வழங்கி வருகின்றனர்.

Related Stories: