கொரோனா தடுப்பு பணிக்காக சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஒருநாள் ஊதியம்: சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து அரசு ஊழியர்கள், பொதுமக்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் நிவாரண நிதி அளிக்க தொடங்கியுள்ளனர்.  இதற்காக, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களும் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் அறிக்கையில், “தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பள்ளி சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர், உதவியாளர்கள் உள்ளடக்கிய எங்களது கூட்டமைப்பில் உள்ளோர் கொரோனா நிதி உதவி வழங்கும் பொருட்டு ஒருநாள் ஊதியத்தைபி டித்தம் செய்துகொள்ள சம்மதிக்கிறோம்”.

Related Stories: