காவல்துறை சார்பில் திருநங்கைகளுக்கு 320 அரிசி மூட்டை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் அன்றாடாம் வேலை செய்து பிழைத்து வரும் ஏழை மற்றும் எளிய மக்கள் மற்றும் திருநங்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சூளைமேடு பகுதியில் வசித்து வரும் திருநங்கைகள் மற்றும் சத்யா நகரை சேர்ந்த மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதையடுத்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜன் மற்றும் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி ஏற்பாட்டின்படி நுங்கம்பாக்கத்தை ேசர்ந்த தொழிலதிபர் சக்திவேல் மூலம் 25 கிலோ கொண்ட 320 அரிசி மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.

Advertising
Advertising

நேற்று சூளைமேடு காவல் நிலையத்தில் ைவத்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜன் ஆதரவின்றி தவித்து வந்த 80 திருநங்கைகளுக்கு தலா ஒரு மூட்டை அரிசி வழங்கினார். அதேபோல் சத்யா நகரை சேர்ந்த 240 ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன.

Related Stories: