அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு பலன் தருமா? பசி, பட்டினியில் வாடும் விளிம்புநிலை மக்கள்

* லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் இடம்பெயரும் அவலம்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ அதிவேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது மிக அவசியமானது என்றாலும் உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் ஊரடங்கின் நோக்கம் உண்மையில் நிறைவேறுமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் நாட்டில் கிட்டத்தட்ட 43 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர். 90 சதவீத வேலைகள் இவர்களைக்கொண்டுதான் நடக்கிறது. மூன்று வார கால முடக்கத்தினால் இவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டும் 13.9 கோடி பேர் உள்ளனர். ஊரடங்கு காலத்தில் வேலை, உணவு கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியிலிருந்து சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர். மாற்று ஏற்பாடாக சிறிய அளவில் செயல்படும் வாகனங்களில் ஆயிரக்கணக்கில் முண்டியடித்து ஏறுகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க சமூக இடைவெளி இன்றியமையாதது. இந்த அடித்தட்டு மக்களை சரிவர கவனிக்காமல், அவர்களுக்கு முறையான  போக்குவரத்து ஏற்பாடுகளை முன்னதாக செய்யாமல் விட்டதால் அரசின் ‘சமூக இடைவெளி’ நடவடிக்கைகள் அடித்துநொறுக்கப்பட்டுள்ளது.

இதனால் வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையை எல்லாம் கருத்தில்கொண்டு இடம்ெபயரும் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு செல்லும் ஏற்பாட்டை செய்துவிட்டு, ஊரடங்கை அமல்படுத்தியிருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இவர்களை தவிர ஏழைகள், சாலையில் வசிப்போர் நிலை எல்லாம் பரிதாபகரமாக மாறியிருக்கிறது. இதுபோன்ற சூழலில் 3 வார கால முடக்கம் தேவையா, பலன் தருமா என்பது பற்றி நான்கு கோணங்களில் இங்கு அலசுகின்றனர்.

Related Stories: