பிப்ரவரி மாதமே விழித்திருக்க வேண்டும்: டாக்டர் ரவிந்திரநாத், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொது செயலாளர்

* நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு செல்லும்போது பஸ்சில் ஒருவருக்கு கொரோனா இருந்தாலே எல்லோருக்கும் பரவக்கூடும். அப்படிபட்ட மோசமான நிலையை செய்து விட்டார்கள்.

Advertising
Advertising

கொரோனா ஊரடங்கு உத்தரவை அரசு திட்டமிட்டு செய்யவில்லை. போதிய முன் கவனம் செலுத்தவில்லை. திடீரென அறிவித்தது சரியானதில்லை. நாம் பிப்ரவரியில் விழித்து கொள்ளவில்லை; ஒரு மாதம் தாமதம்  ஆகி விட்டது; இருந்தாலும், ெகாரோனாவை தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் அவசரம்...அவசியம்... கட்டாயமும் கூட. ஆனால் ஒரு விஷயத்தை அரசு கவனத்தில் கொண்டிருக்கலாம்; பிப்ரவரி மாதமே சீனாவின் நிலைமையை அறிந்து நாம் விழித்து கொண்டிருக்க வேண்டும்; அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்தியா சுற்றுபயணம் வந்தபோது, இதனை திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து இருக்க வேண்டும்.

மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டி இருந்தால், அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துவிட்டு, போக்குவரத்தை நிறுத்தி ஊரடங்கை பிறப்பித்து இருக்க வேண்டும்.

இந்த திடீர் அறிவிப்பால் கிராமப்புறங்களில் இருந்து வந்து நகர்புறங்களில் வேலை செய்து வந்தவர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால், நகர்ப்புறங்களில் இருந்த கொரோனா, கிராமப்புறங்களுக்கு சென்றுவிட்டது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் வழி ஏற்படுத்தி விட்டன. பொதுவாக கொரோனா வைரஸ் விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் நகர்ப்புறங்களை தான் தாக்கும். இதனால் நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு செல்லும்போது பஸ்சில் ஒருவருக்கு கொரோனா இருந்தாலே எல்லோருக்கும் பரவகூடும். அப்படி பட்ட மோசமான நிலையை செய்து விட்டார்கள்.

சீனாவில் செய்த மாதிரி நம் அரசு, எதையும் பொறுப்போடு செய்யவில்லை. ஊரடங்கு உத்தரவு செய்தது தவறில்லை. பல தரப்பட்ட மக்கள், தொழிலாளர்கள், ஏழைகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் அத்தியாவசிய தேவைகளுக்கும் அவதியடைந்து வருகின்றனர். தினக்கூலி தொழிலாளர்களாம் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மாநில அரசு 3 ஆயிரம் கோடி நிவாரணம் ஒதுக்கி இருக்கிறது, இது போதாது, கேராள 20 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறது. மத்திய அரசு 15 ஆயிரம் கோடி தான் ஒதுக்கியுள்ளது. ஆனால் கொரோனா பரவும் இதே நேரத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அமெரிக்காவிடம் இருந்து ராணுவத்துக்கு ஹெலிகாப்டர் மற்றும் கருவிகள் வாங்குவதற்கு செலவு செய்கிறார்கள்.

டெல்லியை அழகு படுத்த 20 ஆயிரம் கோடி செலவு செய்கிறார்கள் இவை இரண்டுமே 41 ஆயிரம் கோடி ஆகிவிட்டது. ஆனால், கொரோனா நிவாரணத்துக்கு 15 ஆயிரம் கோடி தான். அதில் பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளது. நிர்மலா சீதாராமன் அறிவித்த 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி கூட தொழிலாளர்கள் பணத்தை எடுத்து கொடுப்பது தான் உள்ளது.  வீடு வீடாக சென்று தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்கணும், அத்தியாவசிய பொருட்கள் அரிசி, கோதுமை, எண்ணெய் கிடைக்க வசதி செய்ய வேண்டும்.

தினக்கூலி தொழிலாளர்கள் பணம் இல்லாததால், வருமையின் காரணமாக வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர். சாப்பாட்டிற்கும் வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.

முதலாளிகளும் கூலி தராமல் ஏமாற்றி விட்டனர். இது முதலாளிகளுக்கு சாதமாகிவிட்டது. பலர் சம்பளம் வாங்காமலும் ஊருக்கு சென்று விட்டனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை முழுமையாக சோதனை செய்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, நகரங்களில், கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் கவலை படுகிறது அரசு.

Related Stories: