யாகம் நடத்திய ரோஜா

கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள வேண்டும், பதற்றமான சூழல் மாற வேண்டும் என வேண்டி நடிகை ரோஜா யாகம் நடத்தியுள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் எம்எல்ஏவாக இருக்கிறார் ரோஜா. அவ்வப்போது தனக்கு வரும் வாய்ப்புகளை ஏற்று படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் வீட்டில் யாகம் நடத்திய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலானது. இது பற்றி விசாரித்தபோது, கொரோனா பாதிப்பிலிருந்து உலக மக்கள் மீள வேண்டும், பதற்றமான சூழ்நிலை மாற வேண்டும் என வேண்டிக்கொண்டு அவர் இதற்காக யாகம் நடத்தியதாக தெரியவந்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: