ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம், பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒருமாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். அதேவேளையில், மக்களின் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒரு மாத சிறப்பு ஊதியம், கையுறை மற்றும்  முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: