‘தொழிலாளர்கள் நலனை கவனித்து கொள்ள வேண்டும்’

புதுடெல்லி: ‘‘நெருக்கடியான சூழ்நிலையில், தொழில் நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும் தங்களது ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைக் கவனித்துக் கொள்ள வேண்டும்’’ என்று ரயில்வே மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள உற்பத்தி, தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ரயில்வே மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் ேகாயல் நேற்று காணொளி மூலம் உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தொழிலாளர்களும், ஊழியர்களும், ெதாழில் நிறுவனங்களின் சொத்துக்கள், வள ஆதாரங்கள். அவர்களை கூட்டமாக வெளியில் செல்ல அனுமதித்தால், அவர்களது இடப்பெயர்ச்சி கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பாக அமையக்கூடும்’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: