இலங்கையில் முதல் பலி

கொழும்பு: இலங்கையில் 115 பேரு க்கு கொரோனா பாதி ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் குணமடைந்து சென்று விட்டனர். கொரோனா அறிகுறியுடன் 199 பேர் இலங்கை முழுவதும் பல மருத்துவமனைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 65 வயது அனில் ஜசிங்கே என்பவர்  நேற்று இறந்தார். இவர்தான் இலங்கையில் கொரோனாவுக்கு பலியான முதல் நபர்.

Advertising
Advertising

இவருக்கு அதிக ரத்த அழுத்தமும், நீரழிவு நோயும் இருந்தது. இத்தாலி சுற்றுலா பயணிகளுடன் தொடர்பில் இருந்த இவருக்கு வைரஸ் தொற்றியது. கொரோனா பரவல் காரணமாக இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளில் பகுதி நேர ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் வெளிநாட்டினர் வர விதிக்கப்பட்ட தடை ஏப்ரல் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை சிறைகளிலிருந்து 1,460 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: