86 வயதில் நடந்த சோகம் ஸ்பெயின் இளவரசி கொரோனாவுக்கு பலி

மேட்ரிட்: ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா, கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளார். இது அந்நாட்டில் பெரும் சோக த்தை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. அதை கட்டுப்படுத்த வழி தெரியாமல், உலக நாடுகள் விழி பிதுங்கி உள்ளன. இந்நிலையில், ஸ்பெயின் அரசு குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மரியா தெரசாவும் (86) இந்த வைரசால் பாதிக்கப்பட்டார். அவருக்கு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Advertising
Advertising

ஆனால், வயது மூப்பு காரணமாக அவரை இயல்புநிலைக்கு கொண்டு வர முடியவில்லை. இதனால், நுரையீரல் பாதிக்கப்பட்டு இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார். இளவரசியே கொரோனா வைரசால் இறந்தது, அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: