கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அனுமதியின்றி ஊர்வலம் வந்த தனியார் ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்

திருச்சி: கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அனுமதியின்றி ஊர்வலம் வந்த தனியார் ஆம்புலன்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் கடந்த 25ம் தேதி முதல் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகரில் போலீஸ் வேன் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அனுமதியின்றி வாகனங்களை இயக்கினால் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து வருகின்றனர். இந்நிலையில நேற்று உறையூர் வாலஜா சாலையில் ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் ராமசந்திரன் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

Advertising
Advertising

அப்போது 7 தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உரிமையாளர்கள் சங்க மாநில பொது செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் ஒலிபெருக்கியுடன் ஊர்வலமாக வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வாகனங்களை மறித்த போலீசார் இதற்கான முறையான அனுமதி உள்ளதா என கேட்டனர். அப்போது எவ்வித முன்அனுமதி இல்லாமல் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தியது தெரியவந்தது. இதையத்து மாநகர கமிஷனர் வரதராஜூ உத்தரவின் பேரில் 3 டெம்போ, 4 ஆம்னி வேன் என 7 ஆம்புலன்ஸ்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: