பூந்தமல்லி இன்ஜினியருக்கு கொரோனா அறிகுறி?: அடுக்குமாடி குடியிருப்பு முடக்கம்

பூந்தமல்லி: பூந்தமல்லி கரையான்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இன்ஜினியர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மும்பை சென்று விட்டு சென்னை திரும்பினார். அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தியும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்கள் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்ததும் வருவாய் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவர்கள் அந்த நபரை பரிசோதனை செய்து சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு கொரோனா அறிகுறி இருக்குமோ என்ற அச்சத்தில் பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள் அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். மேலும் 9 மாடி கொண்ட அந்த குடியிருப்பில் 54 குடும்பங்கள் உள்ளனர். இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர் இதுவரை எங்கெல்லாம் சென்று வந்தார். யாரை எல்லாம் சந்தித்தார் என்ற பட்டியலையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

Related Stories: