காஞ்சிபுரத்தில் முக கவசம் தயாரிக்கும் போலீசார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக அணிந்து கொள்ளக்கூடிய முகக்கவசம் தயாரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க மத்திய,மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு முக கவசங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதையடுத்து, எஸ்பி சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை துறையில் பணியாற்றும் பெண் காவலர்களில், தையல் தெரிந்த 5 பேர் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதப்படை டிஎஸ்பி மலைச்சாமி நேரடி மேற்பார்வையில், 6 ஆயிரம் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணி ஆயுதப்படை பிரிவு வளாகத்தில் நடக்கிறது. இந்த முகக் கவசங்கள் அனைத்தும் இரண்டடுக்கு கொண்டதாகவும், பயன்படுத்திய பிறகு மீண்டும் துவைத்து பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் காட்டன் துணியில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: