×

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த 157 பேர் கைது: 6 லாரி, 7 கார், 209 பைக் பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த 157 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 லாரி, 7 கார், 209 பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 14ம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4 நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய 4 லாரி, 2 கார் ,181 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி பலர் வெளியே சுற்றி திரிந்தனர். இதையொட்டி, மதுராந்தகம், மாமல்லபுரம், செங்கல்பட்டு, வண்டலூர் ஆகிய டிஎஸ்பி அலவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி நடத்தி 67 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 28 பைக், 5 கார், 2 லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள், இதேபோல் மீண்டும் உத்தரவை மீறி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Tags : arrest , 157 arrested, violating , 6 lorries, 7 cars, 209 bikes seized
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...