×

வேலூர், குடியாத்தத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல் பறிமுதல் செய்யப்பட்ட 4 ஆட்டோ, 3 பைக் ஏலம்: உரிமையாளர்களின் லைசென்ஸ் ரத்து

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையின்றி வாகனங்களில் சுற்றினால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து, உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன் அவை ஏலத்தில் விடப்படும் என்றும், ஆட்டோக்கள், கால்டாக்சிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் வேலூர், குடியாத்தம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் வேலூர் கலெக்டர் அலுவலகம், அண்ணாசாலை, சிஎம்சி உள்ளிட்ட இடங்களிலும் வாகன சோதனை நடந்தது. அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களது லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு ரத்து செய்யப்பட்டது. அதேபோல் குடியாத்தத்தில் தேவையின்றி சாலையில் சுற்றிய 3 பேரின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களது ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 16ம் தேதிக்கு பின்னர் பொது ஏலம் விடப்படும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.


Tags : owners ,Cancellation ,Vellore ,residence ,owner , 4 auto, 3 bike auctions , violation of curfew, Vellore, Residence, Owner's license revoked
× RELATED தூத்துக்குடியில் மீனவர்கள் திடீர் மறியல்