×

கொரோனா பாதிப்புக்கு பிரதமர் ஒதுக்கிய 15,000 கோடி யானைப்பசிக்கு சோளப்பொரி: கே.எஸ்.அழகிரி கருத்து

சென்னை: கொரோனா பாதிப்புக்கு பிரதமர் ஒதுக்கிய 15  ஆயிரம் கோடி யானைப் பசிக்கு சோளப் பொரியாகத்தான்  இருக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கை:  மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் தமிழக மக்களுக்கு முழு பயனையும் அளிக்காதது மிகுந்த வேதனையை தருகிறது.   இன்றைய இக்கட்டான சூழலில் மத்திய பாஜக அரசுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருப்பது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் 30 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது தான். இதைப் பயன்படுத்தி நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்.

எனவே,மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல் திட்டங்களை வகுத்து விரைந்து செயல்பட்டு, எதிர்கொண்டு வருகிற பேராபத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவது மிக, மிக அவசியமாகும். உலகத்தின் வல்லரசாக இருக்கிற 35 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, கொரோனா தாக்குதலில் இருந்து தொழில் முனைவோரை பாதுகாக்க 1.5 டிரில்லியன் டாலர்( நமது ரூபாய் மதிப்பில் 1 கோடியே 7 லட்சத்து 14 ஆயிரத்து 500 கோடி) நிதி ஒதுக்கியுள்ளது. பிரிட்டன் 900 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. ஆனால், நமது பிரதமர் மோடியோ 136 கோடி மக்கள் கொண்ட நம் நாட்டிற்கு, வெறும் ₹15 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருப்பது, யானைப் பசிக்கு சோளப் பொரியாகத்தான் இருக்கும்.

Tags : KS Alagiri , Corona Damage, Prime Minister, Corn Poultry, KS Alagiri
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...