144 தடை உத்தரவை மீறி ஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு தம்பதி: ஓட்டலுக்கு அனுப்பி வைத்த போலீசார்

சென்னை: தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி ஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு தம்பதியினரை தங்கியிருந்த ஓட்டலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

 சென்னையில் 144 தடை உத்தரவை மீறி சாலைகளில் சுற்றி திரிந்ததாக 468 பேர் மீது ஐபிசி 188, 269 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 155 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 7 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 207 வழக்குகளும் பதிவு ெசய்யப்பட்டுள்ளது. இதுதவிர போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 677 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மொத்தம் 291 வழக்குகள் போக்குவரத்து போலீசார் சார்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிண்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் போலீசார் கிண்டி ஆல்டா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சட்டம்ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சந்துரு வெளிநாட்டு தம்பதியினர் ஆட்டோவில் வருவதாக தகவல் கொடுத்துள்ளார். அதன்படி இன்ஸ்பெக்டர் அந்த ஆட்டோவை மடக்கி விசாரித்த போது அவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எசி (48) அவருடன் அவர் மனைவி மரியா (28) ஆகியோர் வந்துள்ளனர். இதையடுத்து அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி மும்பை விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்.

அதன்பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றிப்பார்த்து விட்டு பின் கோவா சென்ற அவர்கள் அங்கு ஆட்டோ ஒன்றை சொந்தமாக வாங்கி அதன் மூலம் மைசூர், பெங்களூர், கோவை, ஊட்டி, கொடைக்கானல் மற்றும் சென்னை வந்த அவர்கள் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளதாக கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் 144 தடவை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் இதுபோன்று வெளியில் சுற்றக்கூடாது என்று அறிவுரை வழங்கி மறுபடியும் ஓட்டலுக்கு அனுப்பி வைத்தனர். பிரான்ஸ் செல்ல எப்போது விமானம் இயக்கப்படுகிறதோ அதுவரை ஓட்டலில் தங்கியிருப்பதாக அந்த தம்பதியினர் கூறியுள்ளனர்.

Related Stories: