சில்லி பாயின்ட்...

* ‘களத்தில் இருக்கும்போது கேப்டன் கோஹ்லி தான் ‘பாஸ்’. அணியை அவர் முன்னின்று சிறப்பாக வழிநடத்துகிறார். உலகில் எந்த ஒரு பயிற்சியாளராலும் அதை செய்ய முடியாது. உடல்

தகுதி என்று வரும்போது கோஹ்லியை பொறுத்தவரை அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தனக்கென மிக உயர்ந்த தரத்தை அவர் நிர்ணயித்துக் கொண்டு அதற்காக கடுமையாக உழைப்பார். அவரது உற்சாகமும் அர்ப்பணிப்பும் மற்ற வீரர்களையும் தொற்றிக்கொள்ளும்’ என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி உள்ளார்.
Advertising
Advertising

* டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டித் தொடர் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தயாராவதற்கான திட்டங்களை தெரிவிக்குமாறு விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா கடிதம் அனுப்பியுள்ளார்.

* ஐபிஎல் டி20 தொடரில் ‘பவர் பிளே’ ஓவர்களில் சிறப்பாக பேட் செய்யக் கூடியவர்கள் என்றால் அது டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா தான் முதன்மையானவர்கள் என்று ஆஸி. அணி முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

* வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் டுவை பிராவோ கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ளார். மூன்று நிமிடம், 31 விநாடிகள் கொண்ட இந்த பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஈஷ் சோதியும் ‘ராப்’ வகை பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார்.

* ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது இந்த நிலையில், கால்பந்து வீரர் டோனி டுவேல் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான மருந்துக் கடையில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். அவர் பார்மஸியில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: