ஆர்பிஐ உத்தரவை தொடர்ந்து 3 மாத இஎம்ஐ.களை ஒத்திவைத்தது எஸ்பிஐ

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி உத்தரவை தொடரந்–்து மூன்று இம்எம்ஐ.க்களை ஒத்திவைத்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளது. ெகாரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சுமையை குறைக்கும் வகையில், வீட்டுக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன் இஎம்ஐ.க்களையும் 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர், இரண்டு நாட்களுக்கு முன்பு இஎம்ஐக்கள் ஒத்திவைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அனைத்து டெர்ம் லோன்களின் தவணைகளும் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் ரஜனீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

இதில் டெர்ம் லோன்கள் என்னென்ன என்று வங்கித்துறை நிபுணர்களிடம் கேட்டபோது, ‘‘அனைத்து வீட்டுக்கடன்கள், வாகனக்கடன்கள், விவசாய கடன்கள் ஆகியவை இதில் அடங்கும்’’ என்றனர். இதன்படி எஸ்.பி.ஐ.யில் மூன்று மாத கடன் தவணைகள் (இஎம்ஐ) தானாகவே ஒத்திவைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. அதேசமயம், ஆர்பிஐ.யின் அறிவிப்பை தொடர்ந்து, நிரந்தர வைப்புக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ குறைத்துள்ளது. இதன்படி டெபாசிட்டுக்கும் சுமாராக 0.2% முதல் 0.5 சதவிகிதம் வரை வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இது ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: