×

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அக்ரம் ‘வெண்கொடி வணக்கம்’

லாகூர்: கொரோனா எதிர்ப்பு போரில் முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு ‘வெண்கொடி ஏந்தி வணக்கம்’ செலுத்துவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். இந்தியாவை விட பாகிஸ்தானில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். நேற்று பிற்பகல் வரை சுமார் 1300 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.  இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், ‘கொரோனா எதிர்ப்பு போரில் முன்வரிசையில் நின்று மருத்துவர்கள், செவிலியர்கள் என மருத்துவ துறையில் அனைவரும் போராடி வருகின்றனர். அவர்களுக்கு பெரிய சல்யூட். கூடவே வெண்கொடி ஏந்தி வணக்கம் செலுத்துகிறேன்’ என்று ட்வீட் செய்துள்ளார்.  தனது குடும்பத்தினருடன் வெண்கொடி ஏந்திய படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.


Tags : Akram ,doctors ,nurses , Doctors, nurses
× RELATED தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3...