×

போலீசார் மறுத்ததால் ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பீகார் பெண்

பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த கவுரி தேவி, தனது கணவருடன் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பிளைவுட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். கர்ப்பிணியான இவர் ஒவ்வொரு மாதமும் பரிசோதனைக்காக கர்நாடகா எல்லையில் மங்களூருவை ஒட்டிய தலபாடி பகுதிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென பிரசவ வலி எடுத்தது. ஆனால், 21 நாள் ஊரடங்கினால் கேரளா-கர்நாடகா எல்லை மூடப்பட்டதால், மங்களூரு  மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சென்றார். அங்கிருந்த போலீசார் கேரளாவில் இருந்து வருவதால் ஆம்புலன்சையும் உள்ளே விட மறுத்தனர். இதையடுத்து, கேரள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்சில் பெண் பிள்ளையை  பெற்று எடுத்தார். தற்போது, தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags : Bihar , Police, ambulance, child, Bihar girl
× RELATED தந்தையை வைத்து 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய...