பதுக்கி வைத்து வாட்ஸ்அப் குழு மூலம் கூடுதல் விலைக்கு சானிடைசர் விற்பனை செய்த 2 பேர் கைது

சென்னை:  கோடம்பாக்கம் பகுதியில் சானிடைசரை பதுக்கி வாட்ஸ் அப் குழு மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை பரவலாக அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் இவற்றின் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சானிடைசர், முகக்கவசம் போன்ற மருத்துவ பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சானிடைசர், முகக்கவசம் போன்றவை பதுக்கினாலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மருத்துவப்ெபாருட்களை கூடுதல் விலைக்கு விற்கும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடம்பாக்கத்தில் அதிகளவு சானிடைசர் மற்றும் முகக்கவசங்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் சுகாதாரத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சென்னை சுகாதாரத்துறையினல் அந்த வாட்ஸ்அப் எண்ணை ைவத்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்தனர். சம்பந்தப்பட்ட நபரின் பெயர் கார்த்திகேயன் என்பதும் அவர் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பே கொரோனா தாக்கத்தை கணித்து குறைந்த விலையில் நிறையை வாங்கியதாக தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 250 சானிடைசர் பாட்டில்கள் மற்றும் மாஸ்க்குகளை  சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு ெசய்த கோடம்பாக்கம் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் வீட்டில் நடந்த சோதனையில் 1500க்கும் அதிகமான சானிடைசர் மற்றும் மாஸ்க்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கார்த்திகேயனுக்கு விற்பைனயில் அவரது நண்பர் முகமது நிஜாம் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வேறு யார் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருகின்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: