×

கொரோனா பீதியால் வியாபாரிகள் வரவில்லை; பறிக்கப்படாமல் கொடியிலேயே அழுகி வீணாகும் திராட்சை: கம்பம் விவசாயிகள் கண்ணீர்

கம்பம்: கொரோனா பீதியால் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால், சுருளிப்பட்டி பகுதியில் திராட்சை பழங்கள் அறுவடை நடைபெறவில்லை. இதனால் திராட்சை பழங்கள் கொடியிலேயே அழுகி வீணாகின்றன. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கூடலூர், குள்ளப்ப கவுண்டன்பட்டடி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, ஆனைமலையான்பட்டி பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் நடந்து வருகிறது.

இங்கு உற்பத்தியாகும் கறுப்பு பன்னீர் திராட்சை சென்னை, சேலம், திருச்சி, மதுரை போன்ற தமிழக பகுதிகளுக்கும் மற்றும் கேரளாவில் கோட்டயம், சங்கனாச்சேரி, எர்னாகுளம், பாலா போன்ற பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி ைவக்கப்படும். ஆண்டு முழுவதும் சீசன் உள்ள திராட்சை விவசாயத்தில் கடந்த நவம்பர், டிசம்பரில் பயிர் செய்யப்பட்ட திராட்சை இம்மாத தொடக்கம் முதலே அறுவடைக்கு தயாரானது. சில தினங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.50 வரை விவசாயிகளிடம் இருந்து திராட்சையை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

இந்நிலையில் ெகாரோனா பீதியால் திராட்சையை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை. இதனால் சுருளிப்பட்டி பகுதியில் உள்ள திராட்சை தோட்டங்களில், அறுவடை காலத்தை கடந்து கொடியிலேயே பழங்கள் அழுகி வீணாகின்றன. இதனால் திராட்சை விவசாயிகள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட திராட்சை விவசாயிகளுக்கு, அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Merchants ,corona panic ,Corona , Corona, rotting waste, grape, pole growers
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...