×

அருப்புக்கோட்டை பகுதியில் ரேஷன் கடைகளில் புழுத்துபோன அரிசி விநியோகம்: கார்டுதாரர்கள் வாங்க மறுப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதியிலுள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் தரமற்ற அரிசியை வாங்க கார்டுதாரர்கள் மறுத்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவில் 110 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய அரிசி, சீனி, மண்ணெண்ணெய், பாமாயில் மற்றும் பருப்பு போன்றவை வழங்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள்  நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. அருப்புக்கோட்டை பகுதியிலுள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரசி தரமற்றதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கொரானா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் உள்ளனர். அருப்புக்கோட்டையில் நெசவுத்தொழில் செய்து வருபவர்கள் அதிகம் உள்ளனர். ஊரடங்கால் வேலையை இழந்த நெசவு தொழிலாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் ரேஷன் அரிசியை வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். அரிசி தரமற்று இருப்பதாலும், துர்நாற்றம் வீசுவதாலும் வாங்க மறுத்து வருகின்றனர். தரமான அரிசி வழங்க கோரி விற்பனையாளர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் வீண் வாக்குவாதம் ஏற்படுகிறது.  எனவே மாவட்ட நிர்வாகம் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

Tags : ration shops ,cardholders ,area ,Aruppukkottai ,Ration Shop ,Rusty Rice , Aruppukkottai, Ration Shop, Rusty Rice, Distribution
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...