×

கொரோனா பரவலில் 2-ம் நிலையில் தமிழகம்: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரிப்பு; நாளை 10 மாவட்டங்களில் சிறப்பு தடுப்பு திட்டம் செயல்படும்...செயலாளர் பீலா ராஜேஷ்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். உலகமெங்கும் பரவிவரும் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டு நாட்களில் வேகமெடுத்துள்ளது. இதுவரை 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருபது பேர் உயிரிழந்துள்ளனர், வெறும் 83 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகமாக கேரளாவில் 176 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 162 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டோரின் 41-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது;

* தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வீடு வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், இரும்பல் இருக்கிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

* கொரோனா தொற்றில் தற்போது 2-வது கட்டத்தில் தமிழகம் நுழைந்துள்ளது.

* வெளிநாட்டில் இருந்து வந்தோர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு பரவியதே 2- கட்ட நிலையாகும், சமூகத்திற்கு இடையே கொரோனா தொற்று பரவினால் அது 3-ம் நிலையாகும்.

* கொரோனா அறிகுறி குறித்து 1,500 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில் 67 பேருக்கு சோதனை முடிவுகள் வரவில்லை.

* காய்ச்சல், இருமல் இருந்தால் அவர்களை கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்யவும் திட்டம்.

* சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் தூத்துக்குடிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதில் உள்நோக்கம் இல்லை. நிர்வாக அடிப்படையில்தான் மருத்துவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பார்.

* தமிழகத்தில் 41 கோரானோ நோயாளிகள் மொத்தம் 10 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். 10 மாவட்டங்களிலும் நாளை வீடு வீடாக ஆரோக்கிய பரிசோதனை.

* பாதிக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் ஆட்சியர்கள், சுகாதார துறையினர் காணொலி மூலமாக சந்திப்பு நடைபெறவுள்ளது.

* தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு மனநலம் ஆலோசனை வழங்குவதற்கு மனநல மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

* தற்போது தனிமைப்படுத்தல் மையங்கள், தினமும் அதிகப்படுத்தி வருகிறோம். ஓய்வு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்து ஊழியர்களுக்கு நோயாளிகளை கையாள்வதற்கு தேவையான பயிற்சிகளை அளித்து வருகிறோம்.

* தற்போது இரண்டாம் நிலையில் உள்ள கொரோனா பாதிப்பு, மூன்றாம் நிலைக்கு சென்றுவிடக் கூடாது என்பதில், அரசு மிகுந்த கவனமாக உள்ளது.

* கொரோனா சமூகப்பரவல் ஆக மாறிவிடக்கூடாது என்பதில் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

Tags : districts ,Bila Rajesh ,victims ,Tamil Nadu , Corona, Tamil Nadu, Increase, Special Prevention Program, Secretary Beela Rajesh
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை