×

மக்களின் பீதியை தணிக்கும் வகையில் கொரோனா பிடியில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை: முந்தைய வாரத்தை காட்டிலும் பன்மடங்கு அதிகரிப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியில்ல நிலையில் குணப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரிக்க தொடங்கியது. கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூகானில் முதன்முறையாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டி உள்ளது. ஆதாவது 601,519 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , 27,441 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 133,454 பேர் குணமடைந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

சமீப காலத்தில் இந்த நோயில் இருந்து குணப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் குணப்படுத்தப்பட்டவர்கள் எவரும் இல்லாமல் இருந்த நிலையில் பிப். மாதத்தில் அது அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் இந்த வாரத்தை பொறுத்தவரையில் அதாவது மார்ச் 24-ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் 6, 800 பேர் குணமடைந்துள்ளனர். 25-ம் தேதி 5,349 பேர், 26-ம் தேதி 9, 714 பேர், 27-ம் தேதி 9,117 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் காணப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே இல்லது. இருப்பினும் இது சற்று ஆறுதல் தரும் வகையில் அமைந்துள்ளது.

குணமடைந்த நாடுகளில் பட்டியல்
1. ஹூபெய் சீனா: 62,098
2. ஈரான்                  : 11,133
3. இத்தாலி             : 10, 950
4. ஸ்பெயின்          : 9,357
5. ஜெர்மனி             : 6,658

வைரஸ் உறுதி செய்யப்பட்ட நாடுகளின் பட்டியல்
1. அமெரிக்கா  : 104,256
2. இத்தாலி       : 86,498
3. சீனா               : 81,394
4. ஸ்பெயின்    : 65,719
5. ஜெர்மனி       : 53,340
6. பிரான்ஸ்       :32,964


Tags : population , People panic, corona, heal, increase
× RELATED உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,61,736 ஆக உயர்வு