×

குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடும் காவிரி குடிநீர்

இளையான்குடி: இளையான்குடி அருகே  காவிரி கூட்டு குடிநீர் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு, தார்ச்சாலையில் தண்ணீர் பாய்வதால் பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இளையான்குடி, காளையர்கோயில் சாலையில், தாயமங்கலம் விலக்கு அருகே காவிரி பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக  தார்ச்சாலையில் தண்ணீர் பாய்கிறது. சாலையில் வீணாக உடைந்து ஓடும் காவிரி நீரால், இளையான்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல கிராமங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் நிலை உருவாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பைப் லைனை சரிசெய்ய, கலெக்டர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்னாள் எம்எல்ஏ மதியரசன் கூறுகையில், இளையான்குடி அருகே தாயமங்கலம் விலக்கு பகுதியில், காவிரி தண்ணீர் உடைந்து வீணாக தார்ச்சாலையில் பாய்கிறது. அதனால் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல், கடும் அவதியடைந்து வருகின்றனர். நோய் பரவும் இந்நேரத்தில் உடைந்து வெளியாகும் தண்ணீரை குடிப்பது,  பொதுமக்களை  அச்சப்பட வைத்துள்ளது. உடைப்பு ஏற்பட்ட குழயை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.


Tags : Cauvery ,road , Pipe, Road, Cauvery drinking water
× RELATED நாங்குநேரியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்