கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஆத்திரத்தில் சாலையில் சென்ற மூதாட்டியைக் கடித்து கொலை

தேனி : தேனி மாவட்டம் போடிநாயக்கநல்லூரில் கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஆத்திரத்தில் சாலையில் சென்ற மூதாட்டியைக் கடித்து கொலை செய்துள்ளார். கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து தமிழ்நாடு திரும்பியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கணக்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தார்.

Advertising
Advertising

இந்நிலையில் நேற்று அங்கிருந்து தப்பிய அவர் திடீரென்று ஆடைகளை நீக்கிவிட்டு நிர்வாணமாக சாலையில் ஓடினார். இதனைத் தொடர்ந்து சாலையில் சென்ற நாச்சியம்மாள் என்ற மூதாட்டியை கழுத்தில் கடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: