பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை: பேருந்து நிலையங்கள், திறந்தவெளி இடங்களில் காய்கறி மார்க்கெட்

விருதுநகர்: பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் விதமாக பேருந்து நிலையங்கள், திறந்தவெளி இடங்களில் காய்கறி மார்க்கெட்டுகள் இயக்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்கள் அதிக அளவில் திரள்வதை தவிக்கும் வகையில் பேருந்து நிலைய வளாகங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் சமூக இடைவெளி விட்டு நிற்க வட்டம் போட்டிருந்தும் அதை பின்பற்றாமல் காய்கறிகளை வாங்கி சென்றனர்.

விழுப்புரம் அருகே இயங்கி வந்த உழவர் சந்தை தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு அதாவது மக்கள் வாங்கும் வகையில் நகராட்சி மைதான பொதுவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கி சென்றனர். கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, இறைச்சி, மருந்து பொருட்களின் விற்பனை தொடர்ந்து  நடைபெறும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இதன் படி, உழவர் சந்தை காய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க திறந்த வெளி இடங்களுக்கு காய்கறி சந்தைகள் இயக்கப்படுகின்றன.

Related Stories: