ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள்: ராகுல் காந்தி வேண்டுகோள்

டெல்லி: ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள் என்று ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்த தொழிலாளர்கள்,  வெளிமாநிலங்களில் இருந்து தங்கள்  சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக திரும்பும்  செய்திகள் கடந்த சில தினங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக டெல்லியில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடைபயணமாகவே உத்தர பிரதேசத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

Advertising
Advertising

இந்த நிலையில், சொந்த ஊருக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு உதவி செய்யுமாறு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நூற்றுக்கணக்கில் நமது சகோதர சகோதிரிகள் பட்டினியுடன், நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறனர். அவர்களுக்கு உணவு மற்றும் தங்க தற்காலிக குடில்கள் அமைத்து முடிந்தால் உதவி செய்யுங்கள்.  குறிப்பாக  காங்கிரஸ் தொண்டர்களுக்கு கோரிக்கையை விடுக்கிறேன்.  ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: