×

கொடூர அரக்கன் கொரோனாவால் எங்கும் மரண ஓலம் : 27,441 பேர் பலி, 601,519 பேர் பாதிப்பு; செய்வதறியாது விழிபிதுங்கிய நிலையில் உலக நாடுகள்!!

வாஷிங்டன் : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 லட்சத்தை தூண்டியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.சீனாவில் வூகானில் முதன்முறையாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலி சீனாவைத் தாண்டி இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறது.

தற்போதைய நிலையில் 601,519 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , 27,441 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 133,454 பேர் குணமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் 104,256 பேருக்கும், இத்தாலியில் 86,498 பேருக்கும் , சீனாவில் 81,394 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினில் 65,719 பேருக்கும், ஜெர்மனியில் 53,340 பேருக்கும், பிரான்ஸில் 32,964 பேருக்கும் ஈரானில் 32,332 பேருக்கும் ஐரோப்பியாவில் 14,543 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 9,134 பேரும், ஸ்பெயினில் 5,138 பேரும், சீனாவில் 3,295 பேரும் , அமெரிக்காவில் 1,704 பேரும் உயிரிழந்துள்ளனர்.


Tags : victims ,countries ,World ,State , Death toll from gruesome monster corona: 27,441 killed, 601,519 affected; World countries in a state of failure
× RELATED இந்தியாவில் கொரோனாவால்...