×

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கைகளுக்கு மோடி பாராட்டு

கொல்கொட்டா: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கைகளுக்காக, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். கொரோனா வைரஸால், நாடு முழுவதும் 887பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதில் மேற்கு வங்க மாநிலம் கண்டிப்பான முறையில் ஊரடங்கு, சமூக விலகல், தனிமைப்படுத்தல், உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நடவடிக்கையை பாராட்டும் விதமாக பிரதமர் நேற்று(மார்ச்-27) தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்ததாக, முதல்வர் அலுவலகம் தெரிவித்தது. மேலும் தற்போது மேற்குவங்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.

பிரதமர் தவிர வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் மம்தா பானர்ஜியுடன் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து கேட்டறி்ந்தனர். நேற்று அங்குள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு சென்ற மம்தா பானர்ஜி, காய்கறிகள் வாங்குவதற்காக வந்த மக்களிடம், இடைவெளிவிட்டு நின்று வாங்கவேண்டுமென அறிவுரை கூறினார். கொரோனா தொற்று நோய் குறித்து மம்தா பானர்ஜி விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.Tags : Mamta Banerjee ,Modi ,West Bengal ,spread , Modi commends, West Bengal,Chief Minister Mamta Banerjee,curb, coronavirus spread
× RELATED அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில்...