×

இந்தியாவில் முதலில் கால்பதித்த கேரளத்தில் கதக்களி ஆரம்பித்த கொரோனா: மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் பலி

கோச்சி: உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை, உலகளவில் 27,352 பேர் உயர்ந்துள்ளனர். 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,057 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 19 உயிரிழந்துள்ளனர். 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவை பொருத்தவரை முதன் முதலில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா கால் பதித்தது. கேரளாவில் தற்போது வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 65 முதியவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மாநிலத்தில் முதன் முறையாக முதியவர் உயிரிழந்துள்ளார். முதல் உயிரிழப்பை தொடர்ந்து கேரள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.


Tags : Corona , Corona: First Elderly Killed In State Of Kerala
× RELATED கொரோனாவால் சாவு உடலை புதைக்க மக்கள் எதிர்ப்பு