×

உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை தயார் செய்ய போர்க்கால பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தினார் டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன்: உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை தயார் செய்ய போர்க்கால பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 102,325 ஆக உயர்ந்து உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் நகரத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு 10 பேரில் 9 பேர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் செயற்கை சுவாசக் கருவிகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு செயற்கை சுவாசக் கருவியை இரு நோயாளிகளுக்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பெருகிவரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கருத்தில்கொண்டு உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் விநியோக பற்றாக்குறைக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி  ஜெனரல் மோட்டார்ஸை வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய போர்க்கால பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  பேசும் போது கூறியதாவது: செயற்கை சுவாசக் கருவிகளைத் தயாரிக்கும் ஜெனரல் எலெக்ட்ரிக்ஸ், பிலிப்ஸ், மெட்ரோனிக், ஹேமில்டன், ஜோல், ரெட்மெட் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய அரசு பேச்சு நடத்தி வருகிறது. இன்னும் 100 நாட்களில் ஒரு லட்சம் செயற்கை சுவாசக் கருவிகளை தயார் செய்யவுள்ளது. இத்தனை கருவிகளையும் அமெரிக்காவே பயன்படுத்தாது. தேவைப்படும் நாடுகளுக்கும் இது அளிக்கப்படும்.கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெல்லும் வரை தொடர்ந்து அமெரிக்க அரசு முழுவலிமையையும் இறக்கி பணியாற்றுவோம். அமெரிக்காவின் பொருளாதார, அறிவியல், மருத்துவ, ராணுவ, உள்நாட்டு பாதுகாப்பு அனைத்தையும் பயன்படுத்தி இந்த கொரோனா வைரஸை ஒழிப்போம். என தெரிவித்துள்ளார்.



Tags : Donald TruDonald Trump , Donald Trump, implements , Wartime Defense Manufacturing Act , prepare life-saving,medical equipment
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்