×

ஐ.பி.எல்-யை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி: கொரோனா குறித்து கடந்த 24-ல் பிரதமர் பேசியதை 19.7 கோடி மக்கள் பார்த்துள்ளனர்...பிரசார் பாரதி தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24-ம் தேதி பேசியதுதான் அதிக மக்கள் பார்த்தாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. இதுவரை, உலகளவில் 27,352 பேர் உயர்ந்துள்ளனர். 5,94,687 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,057 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி  வருகிறது. இதுவரை 19 உயிரிழந்துள்ளனர். 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கடந்த 20-ம் தேதி உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் 22ம் தேதி ஞாயிற்றுகிழமை ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்தார். கொரோனா  பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 24ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், நாட்டு மக்களுக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும் அறிவுரை வழங்கினார். மேலும், 24-ம்  தேதி அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறித்து இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பிரசார் பாரதி முக்கிய தகவல் அளித்துள்ளது. பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி, சசி சேகர் அளித்தப் பேட்டியில், கடந்த 20ம் தேதியன்று பிரதமர் மோடி பேசியதை, டிவி சேனல்களில் பார்த்தவர்களை விட, கடந்த 24ம் தேதி பிரதமர் மோடி பேசியதை அதிகம் பேர் பார்த்துள்ளனர் என்றார். கடந்த, 2016ம் ஆண்டு நம்வபர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை  குறித்து நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றியதை விட, கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றியது தான், அதிகம் பேர் பார்த்துள்ளதாக தெரிவித்தார்.  

பிரதமரின் மோடியின் இந்த உரையை, 19.7 கோடிக்கும் அதிகமான மக்கள், 191 சேனல்களில் பார்த்துள்ளதாக தெரிவித்தார். ஐ.பி.எல்.,கிரிக்கெட் இறுதிப் போட்டியை, 13.3 கோடி பேர் பார்த்துள்ளனர். அதை விட, பிரதமர் மோடி உரையை, அதிக  மக்கள் பார்த்துள்ளனர். கடந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றி, டிவியில் பிரதமர் மோடி உரையாற்றியதை, 6.5 லட்சம் பேர், 163 சேனல்களில் பார்த்துள்ளனர். கடந்த, 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு  நடவடிக்கை பற்றி பிரதமர் அறிவித்ததை, 5.7 கோடி பேர், 114 சேனல்களில் பார்த்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.


Tags : Modi ,IPL ,Corona ,Prasar Bharati , Prime Minister Modi on the back of IPL
× RELATED ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை எப்படி...