×

இந்தியாவில் காட்டுத்தீ போல பரவும் கொரோனா : 873 பேர் பாதிப்பு; 19 பேர் பலி; 24 மணி நேரத்தில் 149 பேருக்கு தொற்று; 38 பேர் பாதிப்புடன் தமிழகம் 9வது இடம்

டெல்லி : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 873ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 27,341 பேரை பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தீயாய் பரவி வருகிறது.  இந்தியாவில் வெளிநாட்டினர் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இருந்து 79 பேர் விடுபட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180 பேரும், கேரளாவில் 173 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. டெல்லியில் 39 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 45 பேருக்கும், கர்நாடகாவில் 55 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது. ராஜஸ்தானில் 48 பேருக்கும்,  தெலுங்கானாவில் 48 பேருக்கும், பஞ்சாபில் 38 பேருக்கும், ஹரியானாவில் 33 பேருக்கும், குஜராத்தில் 45 பேருக்கு கொரோனா தாக்கம் உள்ளது.பனி பிரதேசமான லடாக்கில் 13 பேருக்கும்,  தமிழகத்தில் 38 பேருக்கும், அண்டை மாநிலமான ஆந்திராவில் 14 பேருக்கும்,  ஜம்மு-காஷ்மீரில் 18 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் 30 பேருக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் 15க்கும் கொரோனா தொற்று உள்ளது.உத்தரகாண்டில் 5 பேருக்கும், ஹிமாச்சலில் 3 பேருக்கும், ஒடிசாவில் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. சத்தீஸ்கர் 6 பேருக்கும், பீகாரில் 9 பேருக்கும், மணிப்பூர், மிசோரம், புதுச்சேரி  ஆகிய மாநிலங்களில் தலா 1வருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.சண்டிகரில் 7 பேருக்கும் அந்தமானில 2 பேருக்கும், கோவாவில் 3 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 873 பேரில் 47 பேர் வெளிநாட்டினர் ஆவர்.


Tags : Tamil Nadu ,India ,fire , 873 people affected by fire in India 19 killed; 149 people infected in 24 hours; Tamil Nadu is ninth place with 38 casualties
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...