கொரோனா பாதிப்புக்கு இடையே DD-யில் ராமாயணம் ஒளிப்பரப்பு: இந்தியளவில் டுவிட்டரில் #Ramayan முதலிடம்; #ThanksPMThanksDD டிரேன்டிங்

டெல்லி: இந்தியளவில் #Ramayan  ஹஷ்டாக் முதலிடம் பிடித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை, உலகளவில் 27,352 பேர் உயர்ந்துள்ளனர். 5,94,687 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,057 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 19 உயிரிழந்துள்ளனர். 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே,  கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி அதிகாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அறிவித்திருந்தார்.

தொடர்ந்து, கடந்த 24ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 24-ம் தேதி அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக  அறிவித்தார். இதன் மூலம், நாடு முழுவதும், ரயில், பஸ் போக்குவரத்து, அரசு, தனியார் அலுவலகங்கள் வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும். சிறிய மளிகை கடை, காய்கறி கடை, மருந்து கடை, பால் விற்பனை,  பத்திரிகைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அரசு அனுமதித்துள்ளது. தொடர்ந்து, தமிழகத்திலும், ஊரடங்கு 14.4.2020 வரை நீட்டிக்கப்பட்டது.

 

இதனால், அத்தியாவசிய சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் தவிர, ஏராளமான நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. சுற்றுலா துறைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் நாடு மக்கள்  விட்டிலேயே முடங்கியுள்ளனர். இதற்கிடையே, விட்டில் முடங்கியுள்ள மக்களின் பொழுது போக்கிற்காகவும் வரலாற்றின் சிறப்புகளை அறியவும் மத்திய அரசு வழிவகை செய்தது. இதன்படி, மத்திய அரசின் தர்ஷன் தொலைக்காட்சியில்  ராமாயணம் வராலாற்று காவியம் இன்று 28-3-2020 முதல் காலை 9 மணி முதல் 10 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் ஒரு மணி நேரங்கள் ஒளிப்பரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இன்று காலை 9 மணிக்கு தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கும், தர்ஷன் தொலைக்காட்சிக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில் #Ramayan   #ThanksPMThanksDD என்ற ஹஷ்டாக் பதிவிடப்பட்டு வருகிறது. தற்போது, இந்த ஹஷ்டாக்-கள் இந்தியளவில் முதலிடம் பிடித்துள்ளது.

Related Stories: