ஒரே நாளில் 39 பேருக்கு பாதிப்பு கேரளாவில் நிலைமை படுமோசமாகி வருகிறது: பினராய் விஜயன் கவலை

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு  படுமோசமாகி வருவதாக முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார். இது குறித்து திருவனந்தபுரத்தில் பினராய் விஜயன் நேற்று கூறியதாது: கேரளாவில் இன்று (நேற்று) ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் காசர்கோட்டில் 34 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 25 பேர் துபாயில் இருந்து வந்தவர்கள். கண்ணூரில் 2 ேபருக்கும், திருச்சூர், கோழிக்கோடு மற்றும் கொல்லத்தில் தலா ஒருவருக்கும் நோய் பரவியுள்ளது. நாளுக்கு நாள் நோயின் தீவிரம் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. நிலைமை படுமோசமாகி வருகிறது.

இடுக்கி மாவட்டத்தில் இன்று (நேற்று) புதிதாக நோய் கண்டுபிடிக்கப்பட்டவர்கள், ஏராளமானோருடன் தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள் யார் யார் என்று கண்டுபிடிப்பது பெரும் சிரமம்.இடுக்கி மாவட்டத்தில் கொரோனா கண்டு பிடிக்கப்பட்ட அரசியல் பிரமுகர், சட்டசபை, தலைமை செயலகம் உட்பட முக்கிய இடங்களுக்கும் ெசன்றுள்ளார். அவர் தொடர்பில் இருந்த முக்கிய பிரமுர்களுக்கு இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கியூபாவில் இருந்து கொ நோய் தடுப்பு மருந்துகளை பயன்படுத்துவதற்கும், விரைவான ேசாதனை (ராப்பிட் டெஸ்ட்) நடத்தவும் மத்திய அரசிடம் அனுமதி   கேட்க உள்ளோம். வெளிமாநில தொழிலாளர்களுக்கு 4603 முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1 லட்சத்து 44 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு உணவு, முகக்கவசம், சோப், கிருமி நாசினி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

5,710 பேர் மீது வழக்கு

கேரளா லாக்-டவுன் செய்யப்பட்ட 3வது நாளான நேற்றும் பலர் தங்கள் வாகனங்களில்  சுற்றித் திரிந்தனர். அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டனர்.  நேற்று மட்டும் ேதவையின்றி சுற்றித்திரிந்த 2,365 பேர் கைது  செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 5,710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1,541 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிய கேரள சப்-கலெக்டர்

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் சப்-கலெக்டராக இருக்கும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அனுபம் மிஸ்ராவுக்கு 3 வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிங்கப்பூர், மலேசியாவில் தேனிலவு  கொண்டாடி விட்டு கடந்த 18ம் தேதி  அவர் பணிக்கு திரும்பினார். வெளிநாட்டுக்கு சென்று விட்டு வந்ததால், கொல்லம் அரசு இல்லத்தில் அவர் 2 வாரம் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால், 2 நாளுக்கு முன் அவர் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் சென்று விட்டார். விசாரணையில், அவர் கான்பூரில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Related Stories: