×

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 251 பேர் கைது: 73 பைக்குகள், 15 கார் பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 73 பைக், 15 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொரோனா பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி தமிழகத்தில், ஏப்ரல் 14ம் தேதி வரை, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் அன்னை இந்திராகாந்தி சாலை, காமராஜர் சாலை, காந்தி சாலை, மேட்டுத்தெரு, ரங்கசாமி குளம், சின்ன காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் இருந்த கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் 3ம் நாளாக நேற்றுமூடப்பட்டன. அதே நேரத்தில் ஏப்ரல் 14ம் தேதி வரை, அத்தியாவசிய தேவையான காய்கறிகள், மளிகை பொருள்கள் வாங்க காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், ராஜாஜி மார்க்கெட் ஆகியவற்றுக்கு அதிகாலை, 4 மணிமுதல், மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், சம்பந்தம் இல்லாமல் வாகனங்களில் சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஆனாலும் அதில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 13 பைக், 1 கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் சிலர் வாகனங்களில் சென்றபடி உள்ளனர். அந்த வகையில் மாவட்டத்துக்கு உட்பட்ட செங்கல்பட்டு, மறைமலைநகர், வண்டலூர், மதுராந்தகம் ஆகிய டிஎஸ்பிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள 28 காவல் நிலைய எல்லை பகுதிகளில் தேவை இல்லாமல் வாகனங்களில் சுற்றி வந்த 210 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 14 கார்கள், 60 பைக் பறிமுதல் செய்யப்பட்டன.




Tags : districts ,Chengai ,Kanchi , 251 persons arrested, 73 bikes and 15 cars seized
× RELATED செங்கை கலெக்டர் துவக்கி வைத்தார்;...