கூலித்தொழிலாளி கொலை வழக்கில் 3 வாலிபர்கள் போலீசில் சரண்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருமழிசை உடையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (37). கூலித்தொழிலாளி. இவர், குடிபோதையில் கடந்த  2016ம் ஆண்டு திருமழிசை ஆனந்த் என்பவரையும், கூலித்தொழிலாளியான கருப்பன் (எ) பலராமன் என்பவரையும்  தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்தார். 2017ம் ஆண்டு பாஸ்கர் என்ற பேரூராட்சி ஒப்பந்த ஊழியரையும், குடிபோதையில் வெட்டி கொலை செய்தார். இவ்வாறு ஆனந்தன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஆனந்தன் கடந்த 23ம் தேதி இரவு தனது வீட்டுக்கு குடிபோதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். இதுகுறித்து, வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில்  இக்கொலை வழக்கு சம்பந்தமாக, அதே கிராமத்தை சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (18). கிருபாகரன் (19). பழனி (19) ஆகிய மூவரும் வெள்ளவேடு காவல் நிலையத்தில் நேற்று காலை சரணடைந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: