வேறு ஒருவருடன் தொடர்பால் பிறந்த மறுநாளே பெண் சிசுவை எருக்கம் பால் ஊற்றி கொன்ற தாய்: மாதனூர் அருகே பயங்கரம்

மாதனூர்: கணவனை பிரிந்து வேறு ஒருவருடன் தொடர்பில் பிறந்த பெண் சிசுவை மறுநாளே எருக்கம் பால் ஊற்றி கொலை செய்த கொடூர தாயை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஆசனாம்பட்டு ஊராட்சி, கல்லாபாறை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ஜெயலட்சுமி (34), கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதையடுத்து, ஜெயலட்சுமிக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த ஹரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அவர் கர்ப்பமானார். இதுதெரிந்ததும் ஹரி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி யார் துணையும் இன்றி வீட்டிலேயே ஜெயலட்சுமி பெண் குழந்தை பெற்றுள்ளார். மறுநாளே அந்த சிசுவுக்கு எருக்கம் செடியின் பாலை எடுத்து கொடுத்துள்ளார்.

Advertising
Advertising

இதை குடித்த சிசு சிறிது நேரத்தில் இறந்தது. பின்னர், அதை துணியில் சுற்றி கோணிப்பையில் போட்டு ஒரு  கிணற்றில் வீசிச்சென்றுள்ளார்.

துர்நாற்றம் வீசவே கிணற்றில் கிடந்த சாக்குப்பையை விஏஓ தீபா, வேப்பங்குப்பம் போலீசார் எடுத்து பார்த்தனர். அதில், பெண் சிசு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், குழந்தையை கொன்று கிணற்றில் வீசியது ஜெயலட்சுமி என்று தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனர்.

Related Stories: