×

கொரோனா வைரஸ் மருத்துவ சிகிச்சைகளுக்கு மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் தலா ரூ.1 கோடி நிதி: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் நோய் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் அதாவது வென்டிலேட்டர் மற்றும் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோர் தலா 1 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஏற்கனவே 1 கோடியே 8 லட்சம் வழங்கியுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : K. Balakrishnan ,MPs , Marxist MPs', Rs 1 crore fund , coronavirus treatment, K Balakrishnan announces
× RELATED மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு...