×

ஊரடங்குக்கு கமல் காட்டம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி மற்றும் மத்திய  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, ஏழைகளுக்கு எல்லாம் ஏழையாக வாழும் மக்களை அடைந்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.  இரண்டாவது டிவிட்டில் தமிழக முதல்வரையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் இணைத்து, ‘வீட்டின் உள்இருத்தல் என்பது  முதல்படிதான். ஆனால், அது மட்டுமே தீர்வாகாது. அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது’ என கூறியுள்ளார்.


Tags : Kamal ,show , Kamal , curfew
× RELATED மத்திய அரசு அவசரமாக அறிவித்த ஊரடங்கு...